News Just In

4/06/2022 06:11:00 AM

மின்வெட்டில் மாற்றம்!


நிலவும் மின் நெருக்கடி காரணமாக, கொழும்பு முன்னுரிமைப் பிரதேசம்             தவிர்ந்த ஏனைய பிரதேசங்களநேற்று  (05) முதல் எதிர்வரும் 08 ஆம் திகதி             வரை தினமும் 6 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு                         அமுல்படுத்தப்படவுள்ளது.                                                                                                                                   
அதன்படி, A முதல் F வரையிலான வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை 4 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

G முதல் L வரையிலான வலயங்களுக்கு மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை 4 மணி நேரமும், இரவு 07.30 மணி முதல் இரவு 10 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

அத்துடன், கொழும்பு முன்னுரிமைப் பகுதியில் நேற்று  முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை 3 மணித்தியாலம் 30 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.




No comments: