News Just In

4/03/2022 09:25:00 PM

அமைச்சரவையில் எஞ்சியுள்ளவர்கள் பதவி விலகுவதா அல்லது பதவியில் நீடிப்பதா? இன்னும் சற்று நேரத்தில் விசேட அமைச்சரவை கூட்டம்?


விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த அமைச்சரவை கூட்டமானது இன்னும் சற்று நேரத்தில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், ராஜபக்ஷ குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் பதவி விலகவுள்ளதாக அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும், அமைச்சரவையில் எஞ்சியவர்கள் பதவி விலகுவதா அல்லது பதவியில் நீடிப்பதா என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெளியான செய்தியினை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.அவர் தனது பதவியினை இதுவரை இராஜினாமா செய்யவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments: