News Just In

4/22/2022 12:07:00 PM

“கோட்டா கே கம“வில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தேரர் வைத்தியசாலையில் அனுமதி!




காலி முகத்திடலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தெரிபெஹே சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞருக்கு நீதி கோரி கடந்த 20ஆம் திகதி முதல் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஸவும் உடனடியாக வௌியேற வேண்டும் எனவும் அவர்கள் வௌியேறும் வரையில், போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் தெரிபெஹே சிறிதம்ம தேரர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையிலேயே அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: