News Just In

4/02/2022 01:36:00 PM

அரசாங்கத்திற்கு அதிகரிக்கும் நெருக்கடி – மற்றுமொரு இராஜாங்க அமைச்சரும் பதவி விலகினார்!



தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.எதிர்வரும் மே மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது இராஜாங்க அமைச்சர் பதவியினை இராஜினாமா செய்யவுள்ளதாக ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அறிவித்துள்ளார்.


அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களின் பொதுமக்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றது.இந்தபின்னணியில் ரொஷான் ரணசிங்கவின் பதவி விலகல் குறித்த அறிவிப்பானது அரசாங்கத்திற்கும் மேலும் கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments: