மாவடிப்பள்ளி அல்- மதினா பாலர் பாடசாலையின் பவளவிழாவும் இவ்வாண்டுக்கான மாணவர்கள் விடுகை நிகழ்வும் மாவடிப்பள்ளி அஸ்ரப் மகா வித்தியாலய கேட்போர் கூட்டத்தில் பாலர் பாடசாலை பணிப்பாளர் எம்.எச். எம். அஸ்வர் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் பொறியியலாளர் கயந்த தர்சன, கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவையின் பணிப்பாளரும், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளருமான யூ.எல்.என். ஹுதா உமர், முன்பள்ளி சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஜெஸ்மிர், கலாச்சார உத்தியோகத்தர் ஜே.கே. ரஷீத், ஓய்வு பெற்ற ஆசிரியர் எம்.எம். மனாப் உட்பட பாலர் பாடசாலை அதிபர், ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், அவர்களுக்கான கௌரவிப்பும், 25 ஆண்டு நிறைவுவிழாவும் இதன்பொது நடைபெற்றது.
No comments: