News Just In

4/04/2022 03:59:00 PM

மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்புகை, நீர்தாரை பிரயோகம்!


தங்காலையிலுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் செய்துள்ளனர்.அரசாங்கத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் பாரியளவில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லமான தங்காலையிலுள்ள கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக தற்போது போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது போராட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் செய்துள்ளனர்.
இதன்காரணமாக குறித்த பகுதியில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

No comments: