நாடளாவிய ரீதியில் பல்வேறு வடிவங்களில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் கோஷங்களும் இடம்பெற்று வருகின்றன.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.
இந்நலையில், இன்று திங்கட்கிழமை பிறந்து ஒருநாளான குழந்தையொன்று அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் அவர்களின் பெற்றோருடன் இணைந்துள்ளமை அனைவரையும் பெரும் கவலையைடைய வைத்துள்ளது.
சிறந்த மற்றும் நிலையான எதிர்காலத்தை பிள்ளைகளுக்கு வழங்கும் பெருட்டே இவ்வாறு பெற்றோர் தமது பிள்ளையுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments: