அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியை சந்திப்பதற்காக உக்ரைனுக்கு செல்லப்போவதாக அறிவித்துள்ளார்
வோசிங்டனில் இருந்து கெய்வ் நகருக்கு ஒரு உயர் அதிகாரியை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
இதன்போது தாமும் உக்ரைன் செல்ல தயாராக இருப்பதாக பைடன் கூறினார் எனினும் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் ஃபொக்ஸ் நியூஸிடம் இந்த நேரத்தில் பொட்டஸை (அமெரிக்க ஜனாதிபதியை) கியேவுக்கு அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.
போர் தொடங்கியதில் இருந்து பைடன்; மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இருவரும் அண்டை நாடான போலந்திற்கு சென்று திரும்பினர்
இந்தநிலையில் அமெரிக்க வெளியுறவு செயலர் என்டனி பிளிங்கன் அல்லது பாதுகாப்புச் செயலர் லொயிட் ஒஸ்டின் ஆகியோர் ஸெலென்ஸ்கியை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவிக்கின்றன.
ஏற்கனவே கடந்த வார இறுதியில் சென்ற இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் உட்பட பல ஐரோப்பிய தலைவர்கள் கீவில் உள்ள ஸெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
No comments: