நாளை (05) ஏப்பிரல் 5 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையான 4 நாட்களுக்கான மின் வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி ஏப்பிரல் 5 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை 6 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின் வெட்டை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய A முதல் L வரையிலான பிரிவுகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 4 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும், P முதல் W வரையிலான பிரிவுகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 4 மணி நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
No comments: