News Just In

3/02/2022 06:52:00 AM

உக்ரைய்ன் - ரஷ்ய போரை முடிவுக்கு கொண்டு வருவதில் சீனாவின் ராஜதந்திர முயற்சி!

உக்ரைய்ன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்;கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக சீனா உறுதியளித்துள்ளது. சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இந்த உறுதிமொழியை, உக்ரைய்னிய வெளியுறவு அமைச்சரிடம் வழங்கியுள்ளார்.

சீனாவின் வெளியுறவு மந்திரி வாங் யீ மற்றும் உக்ரைய்னின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா ஆகியோர் தொலைபேசியி;ன் ஊடாக நடப்பு போர் குறித்து விவாதித்துள்ளனர்.

இதன்போது மோதல் தொடர்பில் வருந்துவதாகவும் பொதுமக்கள் இழப்புக்கள் குறித்து தீவிர கவனம் செலுத்துவதாகவும் சீன அமைச்சர் கூறியதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது

அத்துடன் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினையை தீர்க்க வழிமுறையைக் கண்டறிய இரு தரப்பினருக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

இந்தநிலையில் மொஸ்;கோவுடனான அதன் உறவுகளைப் பயன்படுத்தி படையெடுப்பைத் தடுக்க உதவுமாறு பெய்ஜிங்கை உக்ரைய்னிய அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இதன்போதே இராஜதந்திர ரீதியில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வாங் முன்வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த வாரம், நிபுணர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக உக்ரைன் மீதான படையெடுப்பைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை வாக்கெடுப்பை இருந்து சீனா புறக்கணித்தது.

பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதில் பெய்ஜிங் ரஸ்யாவுடன் சேரும் என்று சில ஆய்வாளர்கள் எதிர்பார்த்த நிலையில் சீனா மாறுபட்ட தீர்மானத்தை எடுத்திருந்தது.

No comments: