News Just In

3/30/2022 06:21:00 AM

டீசல் பெற்றுக் கொள்வது தொடர்பாக பொதுமக்களுக்கு சிபெட்கோ விடுத்துள்ள அறிவிப்பு!

டீசல் பெற்றுக் கொள்வதற்காக இன்று (30) மற்றும் நாளை (31) பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

திட்டமிட்டவாறு 37,500 மெட்ரிக் தொன் டீசலுடன் வந்த கப்பலில் இருந்து இன்றைய தினம் டீசலை இறக்கமுடியாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், அத்தியாவசிய சேவைகளுக்காக தொடர்ச்சியாக டீசல் விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments: