நாட்டிலுள்ள நெருக்கடி நிலைமைகளைக் கருத்திற் கொண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகளை ஒத்தி வைக்கும் தீர்மானம் இல்லை என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்தோடு பரீட்சைகளுக்கான வினாத்தாள்களை அச்சிடுவதற்கான கடதாசி கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மின்துண்டிப்பு காரணமாக பரீட்சைகள் ஒத்திவைப்படலாம் என்று தெரிவிக்கப்படும் நிலையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
No comments: