News Just In

3/01/2022 07:08:00 PM

நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்ற இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

வெல்லவாய எல்லேவல நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்ற இரு இளைஞர்கள் இன்று (01) பிற்பகல் வேளையில் உயிரிழந்துள்ளனர். எல்லேவல நீர்வீழ்ச்சியை பார்வையிட இன்று 7 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவொன்று சென்றுள்ளது.

குறித்த நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற போதே இந்த அசம்பாவித சம்பவம் இடம்பெற்றுள்ளது. பல மணி நேரம் நீடித்த தேடுதல் நடவடிக்கைக்கு பின் நீரில் மூழ்கி உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

உயிரிழந்தவர்கள் அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த 21 வயது மற்றும் 22 வயதுடைய இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 21 வயதுடைய இளைஞன் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன் என்பதுடன் மற்றைய இளைஞன் இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: