News Just In

3/08/2022 04:16:00 PM

கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்கும் பணி ஆரம்பம்!


இலங்கைக்கு அருகாமையில் கடலில் நங்கூரமிட்டுள்ள கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவிக்கையில் எரிவாயுவை இறக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

காலை 7.00 மணி முதல் எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாகவும் பிற்பகல் அளவில் நுகர்வோருக்கு எரிவாயுவை வழங்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

முதலாவதாக வைத்தியசாலை ,தொழிற்சாலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளை உள்ளடக்கியுள்ள மேல் மாகாணத்துக்கு எரிவாயு விநியோகிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த கப்பலில் 3,600 மெட்ரிக் தொன் காஸ் எரிவாயு உண்டு. நாட்டின் நாளாந்த எரிவாயுவின் தேவை சுமார் 1100 மெற்றிக்தொன் ஆகும்.எரிவாயுவுடனான 3 கப்பல்கள் வத்தளை ,உஸ்வடகய்யாவ, தல்தியவத்தை ஆகிய எரிவாயு மிதவைக்கு அருகில் கடல் எல்லை பகுதிகளில் நங்கூரமிட்டுள்ளன.

இதில் 2 கப்பல்களில் உள்ள எரிவாயு மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அறிக்கை பெறப்பட்டுள்ளன.

No comments: