News Just In

3/31/2022 11:17:00 AM

மரணதண்டனை விதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் உள்ளிட்ட 3 பேர் விடுதலை !


மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரை குற்றமற்றவர்களாகக் கருதி விடுதலை செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நபரொருவர் மீது துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு கொலை செய்தமை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரையே இவ்வாறு விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: