News Just In

3/11/2022 11:55:00 AM

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2 பில்லியன் டொலர் கடன் உதவி!



ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த ஆண்டு இலங்கையின் செயற்பாட்டுத் திட்டங்களுக்காக 2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை ஒதுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் சத்சுகு அசகவா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே இந்த விடயத்தினைத் தெரிவித்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி கடந்த வருடம் இலங்கைக்கு 750 மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைக் கடனாக வழங்கியது.நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜனாதிபதி முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் பின்னடைவைச் சந்தித்த நாட்டின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும் மனித மூலதனத்தின் வளர்ச்சிக்கும் உதவுவதாக அவர் கூறியுள்ளார்.இதன்போது, ​​பசுமை விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் கைத்தொழில் வலயங்களில் வெளிநாட்டு நேரடி முதலீடு ஆகியவற்றிற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

No comments: