நாட்டில், இறக்குமதி செய்யப்பட்ட 41,000 மெற்றிக் தொன் டீசல் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருவதாக எரிபொருள் தொகை களஞ்சியசாலையின் தலைவர் நாலக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒக்டேன் 92 ரக மற்றும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் என்பன தற்போது விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளாந்தம் 5,000 மெட்ரிக் டன் டீசலும், 4,000 மெற்றிக் தொன் பெற்றோலும் நாட்டுக்கு தேவைப்படுகிறது.
இந்நிலையில், நாடுமுழுவதுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, டீசல் இல்லாததால், நேற்றைய தினம் 20 சதவீத தனியார் பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுன விஜேரட்ண தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இந்த விடயத்தில் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமாயின் தங்களுக்கு சலுகை அடிப்படையில் எரிபொருளை வழங்க அரசாங்கம் பொறிமுறையொன்றை தயாரிக்க வேண்டும்.
இதற்கு மேலும் பஸ் கட்டணங்களை உயர்த்தி பொதுமக்களை அசௌகரியத்திற்குள்ளாக்க முடியாதென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்துள்ளார்.
No comments: