News Just In

2/24/2022 05:43:00 PM

மட்டக்களப்பு மாநகர எல்லை களுவாஞ்சிகுடி வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளதா? மக்கள் அங்கலாய்ப்பு! (காணொளி)

மட்டக்களப்பு மாநகர சிற்றூழியர் சிலர் அடிக்கடி மாநகர எல்லையை கடந்து மாநகர சபையில் கடமை புரியும் அதிகாரி ஒருவரின் தோட்டத்தில் பணிபுரிவதாக கிடைத்தசெய்தியை தொடர்ந்து குறித்த இடத்திற்கு மாநகர சபை அங்கத்தவருடன் மட்டக்களப்பு மாநகர முதல்வர் குறித்த இடத்திற்கு இன்று (24.02.2022) விஜயம் செய்து செய்தியின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தினார்.

மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் மாநகர சபையையில் இவ்வாறான அதிகாரிகள் இருந்து கொண்டு மக்கள் பணத்தை விரயமடிப்பது சரியா? என மாநகர வரியிறுப்பாளர்கள் அங்கலாய்கின்றனர்.

இவ்வாறான ஊழல் வாதிகளை இன்னும் பணியில் வைத்துக் கொள்ள அதிகாரத்தில் இருக்கும் அரசியல் வாதிகளும் உயர் அதிகாரிகளும் விரும்புகின்றனரா எனவும் கேட்கின்றனர்.


No comments: