News Just In

2/24/2022 05:42:00 PM

மட்டக்களப்பு- மண்டூர் இராமகிருஷ்ணர் திருக்கோயில் திறப்பு விழா...!!



மட்டக்களப்பு- மண்டூர் இராமகிருஷ்ண திருக்கோயில் திறப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு (23) புதன்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஶ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜி மகராஜ், கொழும்பு இராமகிருஷ்ண மிஷன தலைவர் ஶ்ரீமத் சுவாமி ராஜேஸ்வரானந்தஜி, மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஶ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தஜி மகராஜ், மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் உதவி முகாமையாளர் ஶ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜி மகராஜ் ஆகியோரின் பிரசன்னத்துடன் நடைபெற்றது.

இன்று காலை 6.30 மணிக்கு புதிய கோயில் திறப்பு விழா இடம்பெற்றதனைத் தொடர்ந்து காலை 11.00 மணிக்கு ஹோமம் இடம்பெற்று,நண்பகல் 12.30 மணியளவில் சிறப்பு ஆராதி இடம்பெற்று, 12.45 மணிக்கு பிரசாதம் வழங்கப்பட்டதனைத் தொடர்ந்து ஆன்மிக அதிதிகளின் சிறப்பு சொற்பழிவுகள் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றுள்ளது. இதன்போது அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments: