News Just In

2/23/2022 01:46:00 PM

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்தில் சமுர்த்தி வங்கியில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் தொடர்பாக விழிப்பூட்டல் நிகழ்வு



சமுர்த்தி திணைக்களத்தின் கீழ் இயங்கும் சமுர்த்தி வங்கியில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் தொடர்பாகவும், ஒரு கூரையின் கீழ் வழங்கும் சமுர்த்தி சேவைகள் தொடர்பாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் செவ்வாய்க் கிழமை (22) ஆரம்பமானது

சமுர்த்தி வங்கியின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பாகவும், மக்களுக்கு நன்மை பயக்கும் புதிய மாற்றங்கள் தொடர்பாகவும், சமுர்த்தி நுண்நிதி திட்டத்தில் இணைந்துள்ள மக்களுக்கு நிதி சார் நிபுணத்துவம் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

வங்கி முகாமையாளர் என். ஜெயசீலன் தலைமை நடைபெற்ற இந் நிகழ்வில் வளவாளர்களாக சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர்களான கே .பரமலிங்கம், கே.தங்கத்துரை மற்றும் சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் கிராம மட்ட சமுதாய அடிப்படை அமைப்பு திருவார உறுப்பினர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்

பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர் போன்றோரின் ஆலோசனைக்கமைவாக பிரதேசத்திலுள்ள இரண்டு சமுர்த்தி வங்கி வலயப் பிரிவுகளிலும் உள்ள 24 கிராம சேவகர் பிரிவுகளிலும் இச்செயற்பாடு இடம் பெறவுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது




No comments: