News Just In

1/28/2022 06:16:00 PM

நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி வாரத்தை அமுல்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானம்!

இலங்கையில் தடுப்பூசி இயக்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி வாரத்தை அமுல்படுத்த சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பூஸ்டர் தடுப்பூசி வாரமானது நாடளாவிய ரீதியிலுள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கையில் தடுப்பூசித் திட்டமானது உத்தியோக பூர்வமாக கடந்தாண்டு ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், இதுவரை 51 மில்லியனுக்கும் அதிகமான கொவிட்-19 தடுப்பூசிகள் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: