News Just In

1/30/2022 09:23:00 AM

கோறளைப்பற்று மத்தியில் கொவிட் தடுப்பூசி திட்டத்தின் ஒரு வருட நிறைவு நிகழ்வு!

கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க அரசாங்கம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடரில், நாட்டு மக்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு நேற்றுடன் (29) ஒரு வருடத்தை பூர்த்தியடைந்துள்ளது.

ஒரு வருட நிறைவு நிகழ்வுகள் நாட்டிலுள்ள அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களிலும் இன்று காலை 10.06 மணிக்கு வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டது.

அந்தவகையில், கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலும் வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம்.நஜீப்கான் தலைமையில் இந்நிகழ்வு நேற்று (29.01.2022)  இடம்பெற்றது.

இதில், கொவிட் பரவல் தொடர்பாகவும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஏற்படும் பயன்கள் தொடர்பாகவும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. அத்துடன், கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களை நினைவு கூறும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலத்தப்பட்டது.

இந்நிகழ்வில்  பிரதேச செயலக, பிரதேச சபை உத்தியோகத்தர்கள் சமூக மட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள், பள்ளிவாசல்கள் நிர்வாகிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

(எச்.எம்.எம்.பர்ஸான்)








No comments: