News Just In

1/30/2022 08:55:00 AM

சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றத்தின் "பொன்மாலை பொழுது" கலை நிகழ்ச்சிகளும், குடும்ப ஒன்று கூடலும்!

சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றத்தின் "பொன்மாலை பொழுது" கலை நிகழ்ச்சிகளும், குடும்ப ஒன்று கூடலும் மன்றத்தின் தலைவர் கலைஞர் அஸ்வான் சக்காப் மௌலானாவின் தலைமையில் கல்முனை பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் சனிக்கிழமை (29.01.2022) இரவு நடைபெற்றது.

பாட்டு, நடனம், அபிநயம், கவிதை, நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் றிஸ்லி முஸ்தபா, இலங்கை மின்சார சபையின் அம்பாறை மாவட்ட பொறியலாளர் எம்.எப்.எம். பர்ஹான், கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதம பொறியியலாளர் ஏ.எம். ஸாஹிர், சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம். பழில், கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.கே. முஹம்மட் றிம்ஸான், சாய்ந்தமருது கமு /கமு/ அல்-ஹிலால் வித்தியாலய அதிபர் யூ.எல். நஸார், சாய்ந்தமருது கமு /கமு/ லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம். சம்சுதீன் உட்பட பிரதேச செயலக அதிகாரிகள், பிரதேச கலைஞர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், வர்த்தகர்கள், முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அதிதிகளின் பாடல், கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் என மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வானது கொரோனா அலையின் வீரிய அலையின் பின்னர் சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றம் நீண்ட இடைவெளியின் பின்னர் நடத்திய நிகழ்வென்பது குறிப்பிடத்தக்கது.

நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்









No comments: