News Just In

1/13/2022 12:34:00 PM

பதவி நீக்கப்படுகிறார் எரிவாயு நிறுவன தலைவர்



லிற்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க (Theshara Jayasinghe) இன்றைய தினம் அந்த பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிறுவனத்தின் புதிய தலைவராக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சரபயின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா (Ranuka Perera) நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயு கலவை சம்பந்தமாக நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடியை கவனத்தில் கொண்டு ஜயசிங்கவை நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனில் கொஸ்வத்த லிற்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர் தெசார ஜயசிங்க அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் லிற்ரோ கேஸ் நிறுவனத்திற்கு இரண்டு தலைவர்கள் நியமிக்கப்பட்டதுடன் மூன்றாவதாக ரேணுக பெரேரா தற்போது நியமிக்கப்படவுள்ளார்.

இதே வேளை கெரவலப்பிட்டிய லிட்ரோ எரிவாயு முனையத்திற்கு ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஷதிடீர்கண்காணிப்புவிஜயமொன்றைமேற்  கொண்டு ள்ளார் .

No comments: