News Just In

1/05/2022 11:32:00 AM

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி ....


அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை களையும் முன்மொழிவுகள் ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன (Dinesh Gunawardena ) தெரிவித்துள்ளார்.அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை களையும் வகையில் முன்மொழியப்பட்ட சம்பள திருத்தங்கள் இந்த மாதம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 247000 ஆசிரியர்களுக்கும், 16000 அதிபர்களுக்கும் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட சம்பளங்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாட்டை களைவதற்கான திருத்தி அமைக்கப்பட்ட சம்பளங்களை வழங்குவதற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட சம்பளங்களை வழங்குதவற்கான அனைத்து நடவடிக்கைகளும் கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
சம்பள முரண்பாட்டை களைவது குறித்த சுற்று நிருபம் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவினால் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என அமைச்சர் தினேஸ் குணவர்தன இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

No comments: