News Just In

1/26/2022 12:31:00 PM

சாணக்கியனின் மற்றுமொரு முக்கியகோரிக்கையினை நிறைவேற்றியது அரசாங்கம்



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனினால் முன்வைக்கப்பட்டிருந்த முக்கிய கோரிக்கை ஒன்றினை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.

பொலன்னறுவை முதல் கொழும்பு வரையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் கடுகதி ரயில் சேவையினை மட்டக்களப்பிலிருந்து ஆரம்பிக்குமாறு 2021.04.29ம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்திருந்தார்.

“முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் பொலன்னறுவை முதல் கொழும்பு வரையிலான கடுகதி ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த ரயில் சேவையானது பொலன்னறுவையிலிருந்து அதிகாலை 3 மணிக்கு மணிக்கு புறப்பட்டு காலை 9 மணிக்கு கொழும்பினை வந்தடைகின்றது.

அதேபோன்று கொழும்பிலிருந்து மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு 7.15 மணிக்கு பொலநறுவையினை சென்றடைகின்றது. இந்தநிலையில் அதிகாலை 3 மணிக்கு பொலன்னறுவையில் இருந்து குறித்த ரயில் சேவை ஆரம்பிக்கப்படுவதற்கு சற்று முன்னராக மட்டக்களப்பில் இருந்து ஆரம்பிக்க முடியுமா என்பதனை ஆராய்ந்து பாருங்கள்.

அதிகமான நேரங்களில் காலியான இருக்கைகளுடன்னேயே ரயில் கொழும்பினை சென்றடைகின்றது. பொலன்னறுவையில் இருந்து சேவையினை ஆரம்பிக்கின்றமை காரணமாகவே குறைந்தளவானர்கள் பயணிக்கின்றனர்.

எனவே பொலன்னறுவைக்கான ஆசனங்களை ஒதுக்கீடு செய்ததன் பின்னராக, பொலன்னறுவையில் இருந்து குறித்த ரயில் சேவை ஆரம்பிக்கப்படுவதற்கு சற்று முன்னராக மட்டக்களப்பில் இருந்து ஆரம்பிக்க முடியுமா?

ஏனெனில் தற்போது மட்க்களப்பிலிருந்து கொழும்பிற்கு வரும் ரயில் பயணிப்போர் இரண்டு நாட்களாவது கொழும்பில் தங்கியிருந்து தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது.

எனினும் காலை 9 மணிக்கு கொழும்பிற்கு வருகை தந்தால், தங்களது கடமைகளை பூர்த்தி செய்துகொண்டதன் பின்னர் மீண்டும் அன்றைய தினம் மாலையே மட்டக்களப்பிற்கு திரும்பி செல்ல முடியும்.

நான் பொலன்னறுவை – கொழும்பிற்கான ரயில் சேவைக்கான நேரத்தினை மாற்றுமாறு கூறவில்லை அந்த நேரத்திற்கு முன்னராக மட்டக்களப்பிலிருந்து ஆரம்பிக்க முடியுமா என்றே கேட்கின்றேன்.“ எனக் அன்றைய தினம் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த போக்குவரத்து அமைச்சர், அதிகாரிகளுடன் பேசிவிட்டு உரிய பதிலினை வழங்குவதாக தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து கருத்து வெளியிட்ட இரா.சாணக்கியன் அதிகாரிகள் இதனை செய்வதற்கு தயாராக இருக்கின்றனர். எனவே வெள்ளோட்ட முறையில் இதனை செய்து பார்க்க முடியுமா?“ எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

சேவையினால் மக்கள் நன்மையடைவார்கள். இவ் சேவையானது மிக விரைவில் எம் மக்களுக்கு கிடைக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்தநிலையில் நேற்று(செவ்வாய்கிழமை) வெளியிடப்பட்ட போக்குவரத்து அமைச்சின் அறிவிப்பிற்கு அமைய, பொலநறுவை - கொழும்பு கோட்டைக்கு இடையில் இடம்பெறும் "புலதுசி " அதிவேக குளிரூட்டப்பட்ட புகையிரத சேவை 28-01-2022 திகதி முதல் மட்டக்களப்பு - கொழும்பு சேவையாக விஸ்தரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகையிரத சேவையானது மட்டக்களப்பிலிருந்து அதிகாலை 01.30 மணிக்கு புறப்பட்டு காலை 08.45 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.

மீண்டும் பிற்பகல் 15.05 கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் புகையிரதமானது இரவு 21.52க்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை வந்தடையும் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தனது கோரிக்கை தொடர்பில் விரைந்து மக்கள் நலன்சார்ந்து செயற்பட்ட அமைச்சருக்கு இரா.சாணக்கியன் நன்றி தெரிவித்துள்ளா

No comments: