News Just In

1/26/2022 12:39:00 PM

கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் முதற்தடவையாக தரமான முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை உணவுப் பொருட்கள் அறிமுகப்படுத்திவைத்தல்



பைஷல் இஸ்மாயில் -
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களின் நீண்ட தொலைநோக்குப் பார்வையில் உள்நாட்டு மருத்துவத்தின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் முதற்தடவையாக தரமான முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை உணவுப் பொருட்கள் சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் அவர்களின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையின் கீழ் சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் 10 வகையான மூலிகை உணவுப் பொருட்கள் தரமான முறையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த மூலிகை உணவுப் பொருட்களில் வல்லாரை கேக், அமுக்கரா பிஸ்கட், சத்துமா பிஸ்கட், உடனடி இலைக்கஞ்சி போன்ற 04 வகையான உணவுப் பொருட்கள் முதற்கட்டமாக தயாரிக்கப்பட்டு மாகாண ஆணையாளரினால் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களிடம் வழங்கி அறிமுகப்படுத்தி வைத்தார்.

இதன்போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



No comments: