News Just In

12/12/2021 10:07:00 PM

மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு ஊடகக் கலாசாரத்தை உருவாக்குவதன் தேவையை வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும வலியுறுத்தல்




மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு ஊடகக் கலாசாரத்தை உருவாக்குவதன் தேவையை வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும வலியுறுத்தியுள்ளார்.தேசிய வானொலியின் றுகுணு சேவையில் இன்று (12) நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றிய அமைச்சர் மாணவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி ஊடக கழங்களை உருவாக்குவதற்கு இதன் மூலம் வசதி கிடைக்கின்றது என்றும் தெரிவித்தார்.

அனைத்துப் பாடசாலைகளிலும் ஊடக கழகங்கள அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் இதில் பொறுப்புக்கள் உண்டு. ஊடக கலாசாரத்தை மேம்படுத்துவதற்கு இந்த வேலைத்திட்டம் மிகவும் முக்கியமானதாகும். அரச ஊடகங்கள் - வரி செலுத்தும் மக்களுக்கு சுமையாக அமையக்கூடாது. அரசாங்கத்தின் புகழை மாத்திரம் முன்னெடுப்பது மட்டும் பொறுப்பல்ல. அரசாங்கம் மேற்கொள்ளும் தீர்மானங்களில் குறைபாடுகள் இருக்குமாயின் அவற்றை நிவர்த்தி செய்து முன்னோக்கிச் செல்ல உரிய பின்புலத்தை வகுப்பது ஊடகங்களின் பொறுப்பாகும் என்றும் தெரிவித்தார்.

சமூக வானொலி சேவைகளின் மூலம் வழங்கப்படும் ஒத்துழைப்பை அமைச்சர் பாராட்டினார். தேசிய வானொலி மற்றும் பிராந்திய வானொலி சேவைகளின் நிதியத்தை அபிலாஷைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். சமூக அரசியல் கலாசாரங்கள் ஒன்றிணையாத மத்திய நிலையங்களாக றுகுணு சேவையை முன்னெடுக்க வேண்டும். ஊடகவியலாளர்களின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்ஹ உரையாற்றுகையில், கூட்டுத்தாபன ஊழியர்களின் பாதுகாப்பிற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். நட்டத்தில் இருந்து மீள்வதற்கு ஊழியர்களின் அர்ப்பணிப்பு அவசியம் என்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

No comments: