News Just In

12/13/2021 05:57:00 AM

தாவூது மோதினார் வீதி அபிவிருத்திக்கு ஹாபிஸ் நஸீர் அஹமட் எம்பி நிதியொதுக்கீடு




பிறைந்துரைச்சேனை முஹைதீன் சனசமூக நிலையம் விடுத்த கோரிக்கைக்கமைவாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான அல்ஹாஜ் ZA.நஸீர் அஹமட் (பொறியியலாளர்) அவர்களினால் பிறைந்துரைச்சேனை 206-C கிராம சேவகர் பிரிவிலுள்ள தாவூது மோதினார் வீதியை கொங்ரீட் இடுவதற்காக 1.5 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இவ்விதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த 07.12.2021ம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான அல்ஹாஜ் ZA.நஸீர் அஹமட் (பொறியியலாளர்) கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் கல்குடா இணைப்பாளர் எம்.ஜவாத், ஏ.எல்.எம்.லியாப்தீன், எம்.ஆப்தீன், எஸ்.ஐ.எம்.நிப்ராஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
அத்தோடு, விரைவாக வேலைத்திட்டங்களைச் செய்து முடிக்க வேண்டுமென்ற பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கைக்கமைய இன்றைய தினம் (12.12.2021) வீதியினை லெவல் படுத்தும் வேலைகள் ஆரம்பமானது.


எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்






No comments: