News Just In

12/12/2021 02:52:00 PM

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தினால் “கிழக்கின் அவிழ்தம்” சஞ்சிகை வெளியீடு!


பைஷல் இஸ்மாயில் -

கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் “கிழக்கின் அவிழ்தம்” சஞ்சிகை சிறப்பு மலர் வெளியீட்டு விழா நாளை மறுதினம் 15 ஆம் திகதி புதன்கிழமை காலை 2.00 மணியளவில் கிழக்கு மாகாண முதலமைச்சின் கூட்ட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் அவர்களின் தலைமையில் நடைபெறும் இவ்விழாவுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

சிறப்பு அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக சித்த மருத்துவப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான வைத்தியர் வி.அனவரதன், வைத்தியர் (திருமதி) உ.பாலமனோகரி, மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய இணைப்பாளரும் புதுக்குடியிருப்பு தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான (திருமதி) பாஸ்கரன் ஜெயலட்சுமி, கல்முனை பிராந்திய இணைப்பாளரும் நிந்தவூர் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்தியர் எம்.ஏ.நபீல், திருகோணமலை பிராந்திய இணைப்பாளரும், மேற்பார்வை சமூகநல மருத்துவ வைத்தியருமான சி.சிவச்செல்வன், திருகோணமலை – கப்பல்துறை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அன்ரன் அனெஸ்றீன், அம்பாறை பிராந்திய இணைப்பாளரும், நவமேதகம மத்திய ஆயுள்வேத மருந்தகத்தின் பொறுப்பதிகாரியுமான வைத்தியர் (திருமதி) டபிள்யு.டி.நில்மனி பிரியந்திக்கா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

சஞ்சிகை வெளியீட்டு உரையை கல்முனை பிராந்திய இணைப்பாளரும் நிந்தவூர் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்தியர் எம்.ஏ.நபிலினாலும், சஞ்சிகை நயவுரையை கிழக்கு பல்கலைக்கழக சித்த மருத்துவப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் வி.அனவரதன் ஆகியோரினால் நிகழ்த்தப்படவுள்ளது.

நாட்டின் அசாதாரன சூழ்நிலையை கருத்திற்கொண்டு கிழக்கு மாகாண ஆயுள்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வைத்திய பொறுப்பதிகாரிகள் மற்றும் “கிழக்கின் அவிழ்தம்” சஞ்சிகைக்கு ஆக்கங்கள் வழங்கிய வைத்தியர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்







No comments: