News Just In

12/26/2021 06:55:00 AM

கோழி இறைச்சி, முட்டை உள்ளிட்ட கால்நடை பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

கால்நடை தீவன தட்டுப்பாடு காரணமாக கோழி இறைச்சி, முட்டை உள்ளிட்ட கால்நடை பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கோழி மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் கோழிஇறைச்சி மற்றும் முட்டை விலை கடுமையாக உயரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் காலங்களில் ஒரு கிலோ கோழிஇறைச்சி சுமார் 900, ரூபாவாகவும் முட்டை ஒன்று 40 – 50 ரூபாவாகவும் உயரும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

டொலர் தட்டுப்பாடு காரணமாக கடன் கடிதம் வழங்க முடியாமல் கோழி தீவனம் உள்ளிட்ட இடுபொருட்களை இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் உள்ள பல கோழி மற்றும் முட்டை பண்ணைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இன்னும் பல மூடப்படும் எனவும் கால்நடை தீவன உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் சுசில் குமார ஹீன்கெந்த தெரிவித்தார்.

No comments: