News Just In

12/09/2021 06:24:00 AM

எரிவாயு சிலிண்டர் வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்க மதிப்பீடு!

நாட்டில் நானூறுக்கும் அதிகமான எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், இன்றும் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்டே உள்ளன.

இதற்கு முடிவு காணமுடியாத நிலையிலும், நுகர்வோரை பாதுகாக்க முடியாத நெருக்கடி நிலையிலுமே நாம் உள்ளோம் என்பது ஏற்றுக்கொள்கின்றோம் என சபையில் தெரிவித்த நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்க மதிப்பீடு செய்யப்படுவதாகவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8), கைத்தொழில், வர்த்தக அமைச்சு மற்றும் நான்கு இராஜாங்க அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் வேளையில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

எரிவாயு சிலிண்டர்களை தொடர்ந்தும் வெடிக்கவைக்க வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை, இந்த நெருக்கடி நிலைமைகளை தவிர்த்து, பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே நாம் விரும்புகின்றோம்.

அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். இந்த விடயத்தில் சகல தரப்பின் ஆலோசனைகளையும், ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொள்ள தயாராக உள்ளோம்.

எனினும் இந்த வெடிப்பு சம்பவங்களுக்கு காரணம் என்ன என்பதை கண்டறியும் இறுதி ஆய்வொன்று முன்னெடுக்கப்படவில்லை.

எரிவாயு கலப்பில் ஏற்பட்ட மாற்றம் காரணாமாக இந்த வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன என்ற பொதுவான நிலைப்பாட்டில் நாமும் உள்ளோம். ஆனால இப்போதைய கலவையை தர நிர்ணய ஆணைக்குழுவும் ஏற்றுக்கொண்டுள்ளது.

அதேபோல் பொதுமக்களை பாதுகாக்க, நுகர்வோரை பாதுகாக்க இதனைவிட மேலான பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

அதேபோல் சிலிண்டர் நிறுவனங்களின் தரம் குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. நுகர்வோர் அதிகார சபை, தர நிர்ணய குழுவின் ஆய்வுக்கு உற்படுத்தாத எந்த எரிவாயுவையும் நாட்டிற்குள் இறக்குமதி செய்ய முடியாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் எரிவாயு கசிவு ஏற்பட்டால் நாற்றம் வீசும் இரசாயனம் கலக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் புதிதாக இறக்குமதி செய்யப்படும்எரிவாயுசிலிண்டர்களுக்குபுதியஅடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கலவையின் அளவு குறித்தும் கணித்தே சந்தைக்கு வழங்கப்படும்.

தற்போது நானூறுக்கு அதிகமான வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இது குறித்து ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதுடன் நட்டஈடு வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அரசாங்கம்இதற்கானபொறுப்பைஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நட்டஈடு பெற்றுக்கொடுக்கப்படும்.

அதேபோல் இந்த வெடிப்பு சம்பவங்கள் இன்றும்இடம்பெற்றுக்கொண்டுள்ளன, பொதுமக்களை பாதுகாக்க முடியாத நிலையிலேயே நாம் உள்ளோம்இதற்கு முடிவு காணமுடியாத நிலையிலேயே நாம் உள்ளோம், ஆகவே நுகர்வோரை நாம் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுக்கவே முயற்சிக்கின்றோம். அதபோல் எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments: