News Just In

12/12/2021 05:33:00 PM

20 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ்



இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்று 3 மாதங்கள் நிறைவடைந்துள்ள 20 வயதுக்கு மேற்பட்ட சகலரும் மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். தகுதியுடை நபர்கள் எந்தவொரு தடுப்பூசி நிலையத்திற்கும் சென்று அதனைப் பெற்றுக் கொள்ள முடியும்.

முதல் இரு கட்டங்களாகவும் அஸ்ட்ரசெனிகா, சீனோபார்ம், ஸ்புட்னிக் மற்றும் மொடர்னா என எவ்வகை தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களும் மூன்றாம் கட்டமாக பைசர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆரம்பத்தில் மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் மத்தியில் பின்னடைவை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. எவ்வாறிருப்பினும் தற்போது மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்கின்றனர்.

இம்மாதத்தின் இறுதி இரு வாரங்களில் பண்டிகை கொண்டாட்டங்கள் இடம்பெறக்கூடும். அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.

எனவே கொண்டாட்டங்களுக்கு முன்னர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். மாறாக மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாமல் பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட்டால் டிசம்பர் மாத இறுதியில் கொவிட் சுனாமியை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்றும் அவர் கூறினார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.



No comments: