News Just In

11/27/2021 10:10:00 AM

வீதியின் நடுவில் நின்ற மின்கம்பங்களை ஓரமாக்கும் நடவடிக்கை!

கல்முனை மாநகர பெரியநீலாவணை பகுதியில் வீதியின் நடுவில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்துவந்த இலங்கை மின்சார சபையின் மின்கம்பங்களை அகற்றி ஓரமாக நடும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அப்பிரதேச மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முக்கியஸ்தர் இசட். ஏ. நௌஷாடிடம் முன்வைத்த கோரிக்கைக்கமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முக்கியஸ்தர் இசட். ஏ. நௌஷாட் இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய பிரதம மின் பொறியியலாளர் எந்திரி ஏ.எம். ஹைக்கலிடம் இது தொடர்பில் கலந்துரையாடி இந்த மக்களின் தேவைகளை உடனடியாக நிபர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க பெரிய விபத்துக்களில் இருந்து தடுத்து அவர் நடவடிக்கை எடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. நீண்டகாலமாக நிலவிவந்த இந்த பிரச்சினைக்கு தீர்வை வழங்கிய இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய பிரதம மின் பொறியியலாளர் எந்திரி ஏ.எம். ஹைக்கல், மின் அத்தியட்சகர் எந்திரி கௌசல்யன், மின் அத்தியட்சகர் எந்திரி நஜிமுதீன் ஆகியோருக்கும் இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் கலாநிதி வஸீர் ஹுசைன் அடங்களாக பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மாளிகைக்காடு நிருபர்

No comments: