News Just In

11/12/2021 08:38:00 PM

பிரதேச அபிவிருத்தி வங்கியின் 29ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு!

பிரதேச அபிவிருத்தி வங்கியின் அக்கரைப்பற்று கிளை தனது 29ஆவது ஆண்டு நிறைவு விழாவை இன்று வெள்ளிக்கிழமை(12) வைபக ரீதியாக கிளை முகாமையாளர் எஸ்.எச்.எம். இப்ராகிம் தலைமையில் கொண்டாடியது.

இதன்போது கோவிட் 19 இனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சலுகை அடிப்படையில் தெங்கு அபிவிருத்தி, விவசாயம், பண்னைவளர்ப்பு, கடற்தொழில் மற்றும் வியாபார அபிவிருத்திக்கடன் வழங்கப்பட்டதுடன் வாடிக்கையாளர்களின் சேமிப்புகளும் ஏற்றுகொள்ளப்பட்டது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதேச அபிவிருத்தி வங்கியின்கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பிராந்திய பொது முகாமையாளர் பீ. ஜி.டவ்ளியூ. அத்துல குமார கலந்து கொண்டதுடன் வங்கி உத்தியோகத்தர்கள், வாடிக்கையாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

நூருள் ஹுதா உமர்.

No comments: