News Just In

10/19/2021 12:12:00 PM

டெங்கு பரவலை கட்டுப்படுத்த கல்முனை கடற்கரையோரத்திற்கு கல்முனை தெற்கு சுகாதார பிரிவினர் களவிஜயம் ..!



கொரானா தொற்று நிலைக்கு மத்தியில் அம்பாறை மாவட்டத்தில் தற்போது இடைக்கிடையே மழை பெய்து வருவதால் டெங்கு நோய் பரவும் சாத்தியமுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் முகமாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரிவில் உள்ள கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினால் டெங்கு நுளம்பு ஒழிப்பு முன்னாயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய கல்முனை பிரதேச சுற்று சூழலில் இருந்து டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் முகாமாக தீவிர சுகாதார நேரடி கண்காணிப்பு களவிஜயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

இந்தவகையில் கல்முனை கடற்கரையோர பகுதிகளில் நேரடி களவிஜயம் 16ம் திகதியன்று  இடம்பெற்றது . 

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணனின் வழிகாட்டலில், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ. ஆர். எம். அஸ்மி தலைமையில் , கல்முனை தெற்கு சுகாதார பிரிவின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ. எம். பாறுக் அவர்களின் நெறிப்படுத்தலில் கல்முனை மாநகர திண்ம கழிவகற்றல் பிரிவு மற்றும் , கல்முனை ப்ரிலியண்ட் விளையாட்டுகழகத்தினரின் ஒத்துழைப்புடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான எம். நியாஸ் , எம். ஜுனைதீன் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு கள உதவியாளர்கள் , பல நோக்கு செயலணியினர் ஆகியோர் இணைந்து குறித்த செயற்பாட்டை மேற்க்கொண்டனர்.


இதன் போது கடற்கரையோரத்தில் கவனிப்பாரற்று பராமரிப்பின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி தோணியோன்றின் உள்ளே மழைநீர் தேங்கி உள்ளதை அவதானிக்கப்ட்ட நிலையில் நீரினை அகற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதுடன் மேலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தோணிகளில் மழைநீர் தேங்கியுள்ளதா என அவதானிக்கப்பட்டது.  அத்துடன் மீன்பிடி தோணி உரிமையாளர்களுக்கு சுகாதார பிரிவினரால் டெங்கு நோய் பரவல் தொடர்பாக அறிவுறுத்தப்பட்டது.










M.N.M. Afras

No comments: