News Just In

8/05/2021 09:00:00 PM

கலாநிதி அனுஷியா சேனாதிராஜா எழுதிய Indo- Srilanka Relationship (1948-1964) With Special Reference To TamilNadu எனும் நூல் வெளியீடு!!


(நூருல் ஹுதா உமர்)
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சமூக விஞ்ஞான துறைத்தலைவர் கலாநிதி அனுஷியா சேனாதிராஜா எழுதிய Indo- Srilanka Relationship (1948-1964) With Special Reference To TamilNadu எனும் நூல் வெளியீடு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை,கலாச்சார பீடத்தின் அரங்கில் அரசியல் விஞ்ஞான துறைத்தலைவர் பேராசிரியர் எம்.எம்.எம். பாஸீலின் தலைமையில் இன்று (05) இடம்பெற்றது.

அரசியல் விஞ்ஞான விரிவுரையாளர் டீ. பாத்திமா சாஜிதாவின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் அரசியல் விஞ்ஞான துறைத்தலைவர் பேராசிரியர் எம்.எம்.எம். பாஸீல் நூல் ஆய்வுரையை நிகழ்த்தினார். தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நூலாசிரியர் கலாநிதி அனுஷியா சேனாதிராஜா தொடர்பிலும் அவர் வெளியிட்டுள்ள இந்த நூலின் முக்கியத்துவம், சிறப்பியல்வுகள் தொடர்பிலும் உரையாற்றினார். 

கலை, கலாச்சார பீடத்தின் பீடாதிபதியும் தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளவருமான பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் இந்திய இலங்கை அரசியல், பொருளாதார உறவுகள் தொடர்பில் உரையாற்றினார். மேலும் முதுநிலை பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் மற்றும் பேராசிரியர் எம்.ஐ.எம். கலீல் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினர்.

நூலாசிரியர் கலாநிதி அனுஷியா சேனாதிராஜாவின் ஏற்புரையுடன் நிறைவுபெற்ற இந்நிகழ்வில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்கள், மாணவர்கள் உட்பட கல்வி சார், கல்வி சாரா உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.





No comments: