காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று அச்சநிலை காரணமாக நடைமுறையில் இருந்த மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு கடந்த 02ஆம் திகதி முதல் தளர்த்தப்பட்ட நிலையில் குறித்த தளர்வானது அரச பணியாளர்களுக்கு மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையவர்கள் கடந்த தினங்களில் மாகாண எல்லையை கடந்து செல்ல முற்பட்டு பலர்திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து அரச பணியாளர்களுக்கு மாத்திரமே திறக்கப்பட்டுள்ளதுடன், நெருங்கிய உறவினர்களின் மரணச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக செல்பவர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments: