News Just In

8/18/2021 02:29:00 PM

கிழக்கில் கொரோனா தொற்று அதிகரிப்பு- மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...!!


(ஹஸ்பர் ஏ ஹலீம்)
இலங்கையின் மேல் மாகாணத்தில் அதிகரித்துக் கொண்ட கொவிட்19 தொற்று கிழக்கு மாகாணத்திலும் அதிகரித்து வருகிறதுஇதனால் மரண வீதங்களும் நான்கு மடங்காகியுள்ளது மக்கள் அவதானமாக செயற்படவும் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு இன்று (18) கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில் நாம் அடிக்கடி மக்களுக்காக ஊடகங்களில் கூறுவது பிரபல்யத்துக்காக அல்ல மக்கள் கவனத்திற்காக .சுகாதார துறையினர் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார்கள் மக்களுக்கும் இதற்காக ஒத்துழைக்க வேண்டும் நோய் தொற்று பரவாமல் கவனமாக செயற்படவும் சாதாரண தடுமல் ஏற்பட்டாலும் பிரத்தியேகமாக வைத்தியரிடம் சென்று மருந்துகளை பெற்று விட்டு வெளியில் நடமாடி தொற்றை பரப்பாமல் நிதானமாக செயற்படவும்

தேவையான தேவையற்ற நிகழ்வுகள் திருமண வைபவங்கள், கோயில் பள்ளிவாயல்கள் ஆலயங்களில் ஒன்று கூடுவதை நிறுத்தி இரு மீற்றர் சமூக இடைவெளிகளை பேணியும் சவர்க்காரமிட்டு கைகளை கழுவியும் இறுக்கமாக சுகாதார நடை முறைகளை கடைப்பிடிக்கவும் .குறிப்பாக பேசும் போது முகக் கவசங்களை அணிய வேண்டும் .

தொடர்ச்சியாக இதனை மக்கள் கடைப் பிடித்து செயற்படவும் . சாதாரண நோய் ஏற்பட்டாலும் அலுவலகங்களுக்கோ வேலைகளுக்கோ செல்வதை தடுக்க வேண்டும். சில பிரதேசங்களில் கடைகளை சுயமாக மூடியுள்ளார்கள் இதனை ஏனைய பிரதேச மக்களும் பின்பற்றி கொரோனா வைரசை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அனைத்து பொது மக்களும் ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் மக்களை கேட்டுள்ளார்.

No comments: