News Just In

8/07/2021 06:48:00 AM

மட்டக்களப்பு மாவட்ட பெரும் போக விவசாய நடவடிக்கை தொடர்பாக இடம்பெற்ற ஐந்து நாள் பயிற்சி செயலமர்வு!!

எதிர்வரும் 2021 மற்றும் 2022 ஆம் வருட காலப்பகுதியில் நாட்டில் மேற்கொள்ளப்படவிருக்கும் பெரும் போக விவசாய நடவடிக்கையின் போது இராசயன பசளை அற்ற விவசாயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதியின் கொள்கை திட்டத்திற்கு அமைவாக விவசாய நடவடிக்கையில் ஈடுபடுகின்ற சகல திணைக்களங்களுக்கும் நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு செயலமர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான விவசாய, கமநல சேவைகள், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஐந்து நாள் பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய நிலையத்தில் நடைபெற்றது.

இதன் இறுதி நாளான நேற்றைய தினம் கிழக்குமாகாண ஆளுநர் அனுராதா ஜஹம்பத் பிரதம அதிதியாக கலந்துகொண்ட நிகழ்விற்கு கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துஷித பி.வணிகசிங்க,

கிழக்கு மாகாண விவசாய மற்றும் நீர்பாசன விலங்கு உற்பத்தி கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயாலாளர் கலாமதி பத்மராஜா உட்பட விவசாய, கமநல சேவை, நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.




No comments: