News Just In

8/23/2021 08:07:00 PM

மக்கள் வரிப்பணத்தின் ஒரு மாத சம்பளத்தை தாய் நாட்டிற்காக அர்ப்பணியுங்கள்...!!


(நூருல் ஹுதா உமர்)
இந்த முடக்கம் அடிமட்ட தினக்கூலி செய்யும் மக்களை பொருளாதாரத்தில் வெகுவாக வீழ்த்தியுள்ளது. இவ்வாறான அசாதாரண சூழலில் மக்களுக்கு உதவி செய்வது பொறுப்புமிக்க மக்கள் பிரதிநிதிகளின் தார்மீக கடமையாகும். எனவே மக்களின் வரிப்பணத்தில் மூலம் மாதாந்த சம்பளம் பெறுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தமது ஒருமாத சம்பளத்தினை ஒப்படைத்து தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் எமது நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார சவாலை சிறிதளவேனும் வெற்றிகொள்ள உதவுவ வேண்டும் என காரைதீவு பிரதேசசபை உறுப்பினர் க.குமாரசிறி வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். தனது அறிக்கையில் மேலும்,

எமது நாடும் நாட்டு மக்களும் எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு நாட்டின் ஒவ்வொரு பொது மகனும் ஏதோ ஒருவகையில் தமது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டிய தார்மீக பொறுப்பில் உள்ளோம். கொரோணா தொற்றின் நான்காவது அலை மனித உயிர்களை நோக்கி தாண்டவமாடுகின்றது. இந்நிலைக்கு சில பொது மக்களும் காரணமாக அமைகின்றனர். சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது செயற்பட்டதனாலேயே இன்று எமது நாடு முடக்கும் நிலைக்கு சென்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments: