News Just In

8/29/2021 09:34:00 PM

கல்முனையில் இரண்டாவது தடுப்பூசி வழங்க ஏற்பாடுகள் மும்முரம்...!!


(நூருள் ஹுதா உமர்)
நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோணா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு கட்டமாக கல்முனை பிரதேசத்தில் முதலாம் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட மக்களுக்கு இராண்டாம் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நாளை (30) முதல் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஏற்பாட்டில் நான்கு கட்டங்களாக மருதமுனை, கல்முனை, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் நடைபெற உள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம். அஸ்மி தெரிவித்தார்.

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மேலும் இங்கு கருத்து வெளியிடும் போது, இந்த இரண்டாம் தடுப்பூசிகள் முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் திங்கட்கிழமை முதல் வழங்கப்படவுள்ளது.

கல்முனை பிரதேச மக்களுக்கு அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, அல்- பஹ்ரியா தேசிய பாடசாலை, அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலயம், அல்- அஸ்கர் வித்தியாலயத்திலும் நற்பிட்டிமுனை பிரதேச மக்களுக்கு அல் அக்ஸா வித்தியாலயத்திலும், பெரியநீலாவணை மக்களுக்கு ஷரிப்தின் வித்தியாலயத்திலும், மருதமுனை மக்களுக்கு அல்-மனார் மத்திய கல்லூரி, அல்- மதீனா வித்தியாலயத்திலும் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும் கல்முனை பிரதேசத்தில் தொற்றாளர்களை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருவதாகவும் பொதுமக்கள் இந்த பெருந்தொற்றை கட்டுப்படுத்த பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், சுகாதார நடைமுறைகளை பேணுவதுடன் சட்டங்களை மதித்து நடக்குமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.


No comments: