News Just In

8/20/2021 07:50:00 AM

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையால் 5 ஒட்சிசன் செறிவாக்கிகள் வழங்கி வைப்பு...!!


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையால் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு வியாழக்கிழமை (19) 5 ஒட்சிசன் செறிவாக்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை தலைவர் த.வசந்தராசா, அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ், சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை செயலாளர் சா.மதிசுதன், பொருளாளர் வ.சக்திவேல், கிளைநிறைவேற்று உத்தியோகஸ்த்தர் திருமதி பி.வேணுஷா, கிளை உத்தியோகஸ்த்தர் க.விஸ்வநாத். உள்ளிட்டோர் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குச் நேரில் சென்று அதன் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரனிடம் ஒட்சிசன் செறிவாக்கிகளை உத்தியோக பூர்வமாக கையளித்துள்ளனர்.

தற்போதைய கொவிட் - 19 நிலமையைக் கருத்திற் கொண்டு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை தமக்கு 5 ஒட்சிசன் செறிவாக்கிகளைத் தந்துதவியதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கொவிட் - 19 மூன்றாவது அலையில் தொடர்ந்தும் குணம்குறிகளுடன் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால், ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலமை ஏற்பட்டுள்ளது. எனவே கொவிட் - 19ஐ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு மக்களின் சமூகப் பொறுப்புணர்வு மிகவும் முக்கியமானதாகும். மக்கள் ஒன்றுகூடுவதை முற்றாகத் தவிர்த்து கைகளை சவர்காரம், அல்லது தொற்று நீக்கி மூலம் கழுவிக் கொள்ளுங்கள், சமூக இடைவெளியைப் பேணவேண்டும், முகக்கவசத்தை சரியான முறையில் அணிந்து கொள்ளுங்கள். அத்துடன் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குத் தப்பூசிகள் உள்ளன. தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 305 கொவிட் - 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துட்டன் 5 பேர் மரணமடைந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் இதன்போது தெரிவித்தார்.










No comments: