News Just In

7/04/2021 08:04:00 AM

இலங்கை ஆசிரியர் சேவை சங்கமும், HOPE( நம்பிக்கை) அமைப்பு, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து பாரிய போராட்டம்!!


நேற்றைய தினம் இலங்கை ஆசிரியர் சேவை சங்கமும், HOPE( நம்பிக்கை) அமைப்பும் ஒன்றிணைந்து பதுளை மாவட்ட குருவிகொல்ல தோட்டத்தில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து பாரிய போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.

* அனைவருக்கும் கல்வியில் சம வாய்ப்பினை வழங்கு!
* கற்றலுக்காக தொலைக்காட்சி அலைவரிசையில் நேரத்தை ஒதுக்கு!
* வீண் செலவுகளை நிறுத்து!
* மாணவர்களின் கல்விக்கு நிதியினை ஒதுக்கு!
* மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உடன் தடுப்பூசி வழங்கு!
* எமக்கு இல்லை online அரசாங்கமோ பெரிய line
* கொரோனாவால் கல்விக்கு பாதிப்பு. தீர்வை உடன் வழங்கு!
* மாணவர்களுக்கு 1 1/2 வருடம் கல்வி இல்லை. அரசாங்கம் என்ன செய்கின்றது!
* சேர் தான் நல்லா செய்தாராம். கல்விக்காக என்ன செய்தார்!

மேற்காணும் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஊவா மாகாண செயலாளர் வருசமான தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் பசறை கல்வி வலயத்தின் செயலாளர் ஸ்ரீதரன் மற்றும் பதுளை கல்வி வலயத்தின் பொருளாளர் பாலமுருகன் ஆகியோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.










No comments: