News Just In

7/07/2021 07:39:00 AM

நாட்டை திறக்காவிட்டாள் பொருளாதாரம் பாதிபடையும் அபாயம்- மட்டக்களப்பில் கிழக்கு ஆளுநர் அனுராதா ஜகம்பத் தெரிவிப்பு!!


ஒன்றரை வருடத்துக்கு மேலாக கொரோனா தாக்கத்தால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம், இதன் காரணமாக எமது பொருளாதாரத்தை வீழ்ச்சி அடையவைக்க முடியாது.

பொருளாதாரம் பாதிக்கும் ஆனால் முதலாவது பாதிக்கப்படுவது பொதுமக்கள் ஆகவே மக்களை பாதிக்க விட முடியாதென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத்தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில், மிக விரைவில் நாட்டை திறக்க வேண்டும் திறந்தால்தான் மக்களுடைய வாழ்வாதாரமும் பொருளாதாரமும் உயர்வடையும்.

அரசாங்கம் சில இடங்களை தனிமைப் படுத்தினால் மக்கள் ஒத்துழைப்பு வழங்குவதுடன் அவர்கள் தெளிவடைய வேண்டும், தொற்று அதிகரிக்க நாங்கள் தான் பொறுப்பாளி என்பதை சுகாதார நடைமுறையைப் போனாமல் வீதியோரங்களில் சுற்றி அலைந்தால் கொரோனா தொற்று விகுதத்தை நிறுத்த முடியாது.

ஆகவே மக்களும் தங்களுடைய பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு முயற்சி எடுக்கவேண்டும் முயற்சி எடுக்காத பட்சத்தில் நாங்கள் இந்த வீழ்ச்சியில் இருந்து மீள முடியாத ஒரு நிலை உருவாகத் தான் வாய்ப்புள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: