News Just In

7/07/2021 07:50:00 AM

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மேலும் 50 ஆயிரம் தடுப்பூசிகள்- முதற்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்...!!


மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் மேலும் 50 ஆயிரம் சைனாபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.அச்சுதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாம் கட்ட கொவிட் தடுப்பூசி வழங்கும் பணிகள் நேற்று(06) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் சுமார் 28 நிலையங்களில் நேற்றைய தினம் கொவிட் தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டுவருவதாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் டாக்டர் எம்.அச்சுதன் தெரிவித்தார்.

இதேநேரம் சுகாதார பணியாளர்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ள நிலையிலும் நேற்றைய தினம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

நேற்றைய தினம் 4000க்கும்  மேற்பட்டவர்கள் தடுப்பூசிகளை ஏற்றியதை காணமுடிந்தது.

தொடர்ச்சியாக இந்த தடுப்பூசிகள் ஏற்றும் செயற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதிப்பணிப்பாளர் டாக்டர் மு.அச்சுதன் தெரிவித்தார்.

No comments: