News Just In

7/07/2021 07:34:00 AM

மட்டக்களப்பு- ஓட்டமாவடியில் சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு வீடுகள் கையளிப்பு...!!


(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் சமூர்த்தி சீட்டிழுப்பு நிதியத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் இன்று கையளிக்கப்பட்டது.

சமூர்த்தி சீட்டிழுப்பு நிதியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் சமூர்த்தி விசேட வீடமைப்பு வேலைத்திட்டத்தில் மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவில் அமைக்கப்பட்ட இரண்டு வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் நடைபெற்றது.

சமூர்த்தி சீட்டிழுப்பு நிதியுதவியின் கீழ் ஒரு வீட்டிற்கு தலா இரண்டு இலட்சம் ரூபா செலவிலும் பயனாளிகளின் பங்களிப்புடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ள இவ் வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் செயலக சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் எம்.ஐ.அஸீஸ், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் எம்.பாஸ்கரன், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என்.எம்.சாஜஹான், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.நியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிரந்தர வீடில்லாத வறுமைக் கோட்டின் கீழ் உள்ள சமூர்த்தி பெறும் குடும்பங்களுக்கு அவர்களின் சொந்த இடங்களில் வீடமைத்து கொடுக்கும் அரசின் இவ் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வழங்கி வைக்கப்பட்டது.






No comments: