ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதார ரீதியாக நலிவுற்ற குடும்பங்களுக்கு கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜாவின் வழிகாட்டலில் செயலக பிரிவில் பயணத்தடை காரணமாக பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பம் மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் வைத்து உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.
உலர் உணவு வழங்கும் நிகழ்வில் கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளர் எம்.எல்.எம்.புஹாரி, அபிவிருத்தி மையத்தின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது இரண்டாயிரத்து நூறு ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் இரண்டாம் கட்டமாக நூறு குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் இரு பேருக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளர் எம்.எல்.எம்.புஹாரி தெரிவித்தார்.
No comments: