நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹிஸ்புல்லா அவர்கள் மட்டக்களப்பு காரமுனை நிலம் சம்பந்தமாகச் சில கருத்தை வெளியிட்டு இருந்தார். கௌரவ தலைமை தாங்கும் உறுப்பினர்களே! காரமுனை என்னும் இடமானது பூர்வீகமாக தமிழர்கள் வாழ்ந்த ஒரு தமிழ் பிரதேசம். இந்தப் பிரதேசத்திலேயே இஸ்லாமிய சகோதரர்கள் வாழ்ந்ததாக கௌரவ ஹிஸ்புல்லா அவர்கள் நேற்றைய தினம் அவர்களுடைய சான்றுகள் அளிக்கப்பட்டதென்று பாராளுமன்றத்திலே சொன்னார்.
உண்மையிலே கௌரவ தலைமை தாங்கும் உறுப்பினர்களே! மிக முக்கியமாக மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த அளவில் அரசு அதிகாரிகளைப் பழிசுமத்துவது மிகவும் பிழையான விடயம். 2023 ஆண்டளவில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களை இந்தக் காரமுனை பிரதேசத்தில் குடியேற வந்தபொழுது நான் அந்த இடத்திலே நின்று என்னுடைய கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் நின்று அந்தக் காணியாளர்களையும், அந்த ராணுவ அதிகாரிகளையும், அந்தப் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த சகோதரர்களையும் நாங்கள் அங்கிருந்து விரட்டி அடித்திருந்தோம். அந்த நேரத்திலேயே இவ் காரமுனையை பாதுகாக்க ஹிஸ்புல்லா அவர்கள் வரவில்லை. அதே நேரத்திலேயே தான் மிக முக்கியமாகத் தற்பொழுது நான் சில அரசு அதிகாரிகளிடம் பேசியபொழுது சில வாகரை வடக்கு கோரளைப்பற்று வடக்கு பிரதேசத்தில் இருந்த சிலர் யுத்தம் காரணத்தினால் சிலர் இடம்பெயர்ந்து போயிருக்கிறார்கள். அவர்களுக்கு மாற்று காணியில் சில இடங்களில் வழங்கியிருந்தால் அந்த மாற்று காணிகளை வைத்துக்கொண்டு மீண்டும் பூர்வீகமாக வாழ்ந்த காணிகளை கேட்கிறது நியாயம் இல்லை என்று அதிகாரிகள் சொல்கிறார்.
அந்த வகையில் காரமுனை எம்பது தமிழர்களுக்குச் சொந்தமான ஒரு பிரதேசம். இந்த விடயம் சம்பந்தமாக நாங்கள் மாவட்ட மட்டத்தில் ஆராயாமல் முடிவுகளை எடுக்க முடியாது. பாராளுமன்றத்திலே இதுக்கான சில திட்டங்களைக் கொண்டு வருவதன் மூலம் நாம் அனுமதிக்க மாட்டோம்.
அதே அதே நேரத்திலேயே மிக முக்கியமான ஒரு விடயம். மட்டக்களப்பிலிருந்து கொழும்பு வரும் இந்த ரயில் சேவையை பற்றி மிக முக்கியமா சொல்ல வேண்டும். நான் அறிந்த வகையிலே அரசாங்கங்கள் புதிய ரயில் சேவையை உருவாக்குவது பற்றித்தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அரசாங்கம் புதிய ரயில்பாதையை உருவாக்கியதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அரசாங்கங்கள் புதிய புகையிரத புகையிரதங்களைக் மக்களுக்காக கொண்டு வந்தே கேள்விப்பட்டிருக்கிறேன்.
முதன்முறையாக, மட்டக்களப்பிலிருந்து கொழும்பு செல்லும் நான்கு நேர சேவையாக இருந்த ரயில் சேவையை ஒரு சேவையாக மாற்றிய இவ் அரசின் சாதனை. இந்த வரலாற்று சாதனை செய்த பெருமை இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைச் சேரும். எங்களுடைய மாவட்டத்திலே காலை 06.10 தொடங்கி கொழும்புக்கு வருவதற்கு ஏதுவாக இருந்த புகையிரத சேவையை தற்பொழுது ஐந்து மணிக்கு ஆரம்பித்து அவர்கள் கல்லோயா சென்று திருகோணமலையில் இருந்து வரும் ரயில் சேவையில் மாறி ஏறி போக வேண்டிய நிலை இருக்கின்றது. அதே போலத்தான் கொழும்பிலிருந்து வந்தாலும் கல்லோயா இறங்கி மாறி வர வேண்தியுள்ளது.
புலஸ்தினி என்ற அந்த ஒரு ரயில் சேவை கடந்த அரசாங்கம் இருந்தபொழுது நான் கடந்த அரசாங்கத்திடம் பேசி மட்டக்களப்புக்குக் கொண்டு வந்த சேவை தற்பொழுது இவ் அரசு வெள்ளிக்கிழமைக்கும் ஞாயிற்றுக்கிழமைக்கும் ஆக மாத்திரம் மாற்றியுள்ளது.அதே போலத்தான் இரவு 08.15 மட்டக்களப்பிலிருந்து செல்லும் ரயிலை அரசு முழுமையாக இல்லாமல் செய்திருக்கின்றது.
நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஜனாதிபதியிடம் பேசி ஒரு தேசிய விமான சேவை ஆரம்பிக்க முயற்சிக்கும் போது. அடுத்த பக்கம் மாவட்ட இரயில் சேவையினை மட்டுப்படுத்தி எமது மக்களுக்கான போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கின்றது இவ் அரசு. இதனால் எமது மக்கள் பாரிய துன்பங்களை அனுபவிக்கின்றனர். உரிமையும் இல்லை இரயில் வசதியும் இல்லை.
No comments: