News Just In

7/30/2021 10:33:00 PM

எல்லை மீள்நிர்ணயம் தொடர்பில் எமது சமூகத்தினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை...!!


மடடக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நேற்று 29.07.20201 மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் வியாலேந்திரன், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுறை சந்திரகாந்தன், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நசீர் அஹமட், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், மற்றும் கோவிந்தன் கருணாகரன் (ஜனா), ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்டத்தில் அமுல்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கான மீளாய்வு புதிய திட்ட முன்மொழிவு என்பன தொடர்பாக ஆராயப்பட்டது. இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் அரச அதிகாரிகள் மாவட்டத்தில் அமுல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களை தேசிய வரவு செலவுத்திட்டத்தை ஆய்வு செய்து மாவட்டத்தில் அமுல்படுத்தப்படக்கூடிய வேலைத்திட்டங்களுக்கு எவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதனை ஒப்பீட்டு பார்க்க வேண்டும் மேலும் அமுல்படுத்தக்கூடிய நிலையில் உள்ள செயற்திட்டங்களில் எச் செயற்திட்டங்கள் எமது மாவட்டத்தில் தேசிய வேலைத்திட்டங்களில் உள்ளடக்கப்படவில்லை என்பதனையும் அறிவதன் மூலம் அரசியல்வாதிகளாகிய நாங்கள் அதற்க்கான முயற்சிகளை மேற்கொண்டு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு அதிக பங்களிப்பை செய்ய முடியும்.

இங்கு மாவட்டத்தின் எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான அறிக்கைகளை அலுவலக ரீதியாக மாவட்ட செயலகத்தினால் அபிவிருத்தி குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் சிபாரிசு செய்து அனுப்புவது என்றும் தீர்மானிக்கப்பட்ட போது பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் அவர்கள் எமது பிரதேச மக்களின் எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான அறிக்கைகளில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை ஏறாவூர் நகர், பிரதேச செயலகம் கோறளைப்பற்று மத்தி, காத்தான்குடி, கோறளைப்பற்று மேற்கு, போன்ற பிரதேச செயலகங்களினாலும் அப்பிரதேச மக்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லை மீள் நிர்ணயத்தை எவ்வித மாற்றமும் இன்றி மாவட்ட செயலகம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உறுதியாகவும் தெளிவாகவும் உரையாற்றினார். அதன்படி இதனை அனுப்பி வைப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இவ் ஒருங்கிணைப்புக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் வியாலேந்திரன், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுறை சந்திரகாந்தன், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நசீர் அஹமட், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், மற்றும் கோவிந்தன் கருணாகரன் (ஜனா),மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், அரச நிறுவனங்களின் உயரதிகாரிகள், மாநகர சபை மேயர் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் பிரதேச செயலாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.













No comments: